Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் போராட்ட முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்றனர்.  அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் ஆலோசித்து உபகரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சங்கத்தின் பொதுச் செயலர் பொன்.சண்முகம், ஒருங்கிணைப்பாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி, பொருளர் எம்.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.பாலமுருகன், மகளிரணித் தலைவி எம்.பீர்பாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai