Enable Javscript for better performance
மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் மீன்பிடி தடைக் காலம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

    ஆழ்கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், ஏப்ரல் 15 முதல் மே 29ஆம் தேதி வரை மொத்தம் 45 நாள்கள் மீன்பிடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

     இதையொட்டி, கடலூர் மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் விசைப் படகுகள், பைபர் படகுகளை 45 நாள்களுக்கு துறைமுகப் பகுதிகளிலும், கரையோரங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை மீனவர்கள் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைக் காலத்தை பயன்படுத்தி,  பழுதடைந்த படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

     படகுகளை பழுது பார்க்கவும், படகின் பக்கவாட்டில் ஒட்டியுள்ள கிளிஞ்சல்கள், பாசிகளை அகற்றி சீரமைத்து வண்ணம் பூசும் பணிக்காகவும் கடலூர் துறைமுகத்துக்கு தொழில்நுட்பப் பணியாளர்கள் திரளானோர் வந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai