Enable Javscript for better performance
வாக்குப் பதிவு குறைந்த மையங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப் பதிவு குறைந்த மையங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 15th April 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைந்த மையங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய தேர்தல் பார்வையாளர் நிதிபாண்டே அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம், இந்திய தகவல் ஆணையத்தின் இயக்குநர் நிதிபாண்டேவை அனுப்பியிருந்தது. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆய்வு நடத்தினார். இந்நிலையில் தனது ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்களிடம் விளக்கியுள்ளார்.

     இதுகுறித்து தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரித்ததாவது:

    தமிழகத்தில் மே 16ஆம் தேதி வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. எனவே, கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு குறைந்த பகுதிகளில் தற்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்பகுதிகளில் தனியாக குழு அமைத்து ஏன் வாக்குப்பதிவு குறைந்தது என்ற காரணத்தை கேட்டறிய வேண்டும். அவர்களின் குறைகளை களைய முடிந்தால் அதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

     குறிப்பாக, சில பகுதிகளில் வெள்ள நிவாரணம் வரவில்லை, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீது கோபம் இருப்பதால் வாக்களிக்க மாட்டோம் என்று வாக்காளர்கள் கூறினால் அவர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும் என நிதிபாண்டே விளக்கியதாகத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai