Enable Javscript for better performance
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இணையம் மூலம் அனுமதிச் சீட்டு- Dinamani

சுடச்சுட

    

    8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இணையம் மூலம் அனுமதிச் சீட்டு

    By கடலூர்  |   Published on : 15th April 2016 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்-லைன் (இணையம்) மூலமாக அனுமதிச்சீட்டு பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரா.வீரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்.18ஆம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை எழுத அரசுத் தேர்வுகளின் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் w‌w‌w.‌t‌n‌d‌g‌e.‌i‌n என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

     இணையதளத்தின் உள்ளே சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து பெற்றுகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai