சுடச்சுட

    

    வேளாண் அறிவியல் நிலையத்தில் கத்தரி கன்றுகள் விற்பனை

    By கடலூர்  |   Published on : 07th August 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கத்தரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது செவ்வந்தம்பட்டி கத்தரி என்றழைக்கப்படும் பி.எல்.ஆர்-2, அண்ணாமலை-1 ஆகிய ரகங்களை உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்குச் சென்று ஒரு கத்தரி கன்றினை 80 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai