அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம்

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிஐடியு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிஐடியு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிஐடியு தொழிற்சங்கத்தின் கடலூர் மாவட்ட 11ஆவது மாநாடு நெய்வேலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.ஆர்.ராமலிங்கம் சங்கக் கொடியேற்றி வைத்தார்.

மாவட்டச் செயலர் பி.கருப்பையன், பொருளர் டி.பழனிவேல் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்து பேசினர். விவசாய சங்க மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வி.தொ.ச. மாவட்டச் செயலர் எம்.பி.தண்டபாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலர் வி.குமார் மாநாட்டை தொடங்

கி வைத்தும், பொதுச்செயலர் ஜி.சுகுமாறன் நிறைவு செய்தும் பேசினர்.

மாநாட்டில், என்எல்சி நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர தன்மையுள்ள வேலைகளில் ஈடுபடுவோரை நீதிமன்ற தீர்பின்படி நிரந்தரம் செய்ய வேண்டும். செப்.2இல் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வது. கடலூர் சிப்காட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் பலதரப்பட்ட தொழிலாளர்களையும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (பி.எப்.,) இணைப்பதோடு, இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com