வேளாண் அறிவியல் நிலையத்தில் கத்தரி கன்றுகள் விற்பனை

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கத்தரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கத்தரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது செவ்வந்தம்பட்டி கத்தரி என்றழைக்கப்படும் பி.எல்.ஆர்-2, அண்ணாமலை-1 ஆகிய ரகங்களை உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்குச் சென்று ஒரு கத்தரி கன்றினை 80 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com