சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் இந்திய  வேளாண் ஆராய்ச்சி கழகம், கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில், அங்கக வேளாண்மை குறித்த இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி இயக்கக பொருளியல் பிரிவு சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு உதவியுடன் அங்கக வேளாண்மை மற்றும் வயல்வெளி செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நவ.29,30  ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
    தொடக்க விழாவில் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.புகழேந்தி பயிற்சியை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.
    விழாவில் கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன் அங்கக வேளாண்மையின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
    பல்கலைக்கழக கல்வி விவகார இயக்குநர் கே.மணிவண்ணன், அங்கக வேளாண் முறையில் கூட்டு பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் பலன் பெறுமாறு வேண்டினார். கூட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை விவசாயிகள்  பகிர்ந்து கொள்ளவும் அறிவுறுத்தினார்.
    விழாவில் பொருளியியல் பிரிவுத் தலைவரும்,  பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான சுந்தர் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.  முனைவர் விஜயன் வரவேற்றார்.
    சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி அங்கக வேளாண்மை வயல்வெளி செயல் விளக்கம் குறித்து பேசுகையில், இரண்டாவதொரு பசுமை புரட்சி ஏற்பட வேண்டுமென்றால் அது அங்கக வேளாண்  பசுமை புரட்சியாகும் எனக் குறிப்பிட்டார்.  
    மேலும், பாரம்பரிய கோடைகால விதைகளை பயிரிட வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த வேளாண் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகளை  வலியுறுத்தினார்.  
    வேளாண் நடவடிக்கைகளுக்கு எவ்வித வரிவிதிப்புமில்லை. குழந்தைகளை விவசாயம் படிக்க வையுங்கள், அங்கக வேளாண்மையில் ஈடுபடுங்கள், வெற்றி பெறுவீர்கள் என்று விவசாயிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
    விழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  விவசாயிகள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்  கலந்து கொண்டனர்.  இறுதியாக, முனைவர் செழியன் நன்றி கூறினார்.
    விழாவுக்கான ஏற்பாடுகளை பொருளியல் பிரிவு சுந்தர், செழியன், வேதாந்த தேசிகன், அசோகன், விஜயன், அண்ணாதுரை, குமார், ராமஜெயம், கோபால், ஆரோக்கியசாமி, சிவக்குமார், தர்மதுரை மற்றும் சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி அழகுகண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai