சுடச்சுட

  

  பண்ருட்டி வட்டம், மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
  மருங்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம்,  மருத்துவமனைக்கு அவசரகால ஊர்தி, ஈப்பு, அலுவலகக் கட்டடம், மருத்துவமனை வளாகத்தில் ஹைமாஸ் விளக்கு, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மருத்துவர் கார்வண்ணன் உடனிருந்தார்.
  அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றவர்,  மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். எம்பிசி மாணவர்களுக்கான விடுதி, மதில் சுவர் உயர்த்துதல், பழைய கட்டடத்தை அகற்றுதல், பள்ளி நேரத்தில் பேருந்து வசதி மற்றும் தரை வழியாக செல்லும் மின்சார வயரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  வைக்கப்பட்டன.
  பின்னர், அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
  நிகழ்வின் போது, பள்ளித் தலைமையாசிரியர் சம்பத்குமார், ஊராட்சிச் செயலர் ஜனார்த்தனன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai