சுடச்சுட

  

  30:ரூ.500, ரூ.1,000 நோட்டை பயன்படுத்தி எல்.ஐ.சி முனைமம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  கடலூர், மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ராமகிருஷ்ண நாயர் தலைமை  வகித்தார். செயலர் என்.ஆதித்யன், பொருளர் வி.தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி கிளைச் செயலர் ஆர்.சரவணகுமார், கோட்டத் தலைவர் டி.மணவாளன், முன்னாள் முகவர் சங்கத் தலைவர் தீனதயாளன் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி முனைமம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai