சுடச்சுட

  

  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
   கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஏ.செல்வராசு தலைமை வகித்தார்.
  துணைத் தலைவர்கள் ஜி.வேணு, ந.பூவராகமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆ.ராமதாஸ் வரவேற்றார். கூட்டத்தில், சிதம்பரம், காட்டுமன்னார்குடி, விருத்தாசலம், கடலூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.  இதில், 1.1.2016 முதல் அமல்படுத்தும் வகையில் 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், 1.7.2016 முதல் 7 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்குதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai