சுடச்சுட

    

    கார்த்திகை தீபத்துக்காக  வடலூரில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

    By DIN  |   Published on : 01st December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார்த்திகை தீபத் திருநாள் டிச.12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வடலூர் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருநாளும் ஒன்று. இந்நாளில், மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறம் மற்றும் முற்றத்தில் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி  அலங்கரிப்பது தமிழர்களின் வழக்கம்.
    கார்த்திகை தீபத் திருநாள் டிச.12-ஆம்  தேதி கொண்டாடப்படவுள்ளது.  பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்  காட்டி வருகின்றனர்.
    வடலூர், தொழிற்பேட்டையில் அச்சு மூலம் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூன்று வகையான மண்ணை குறிப்பிட்ட சம அளவில் கலந்து அச்சு இயந்திரம் மூலம் அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
    இதுகுறித்து, அகல் விளக்கு தயாரிப்பு தொழிற்சாலையின் உரிமையாளர் எம்.கிறிஸ்துராஜ் கூறியதாவது:
    கடந்த 25 ஆண்டுகளாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். விருத்தாசலத்தில் இருந்து கொண்டு வரப்படும் டெரக்கொட்டா, பெல்ஸ்பர், குவாட்ஸ் வகை மண்ணை குறிப்பிட்ட அளவில் கலந்து கையால் இயங்கும் அச்சு இயந்திரத்தின் மூலம் அகல் விளக்குகளை தயாரிக்கிறோம்.  ஒரு டன் மண்ணின் விலை ரூ.2,200.
    குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்காக அதிக அளவில் அகல் விளக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் லண்டன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் தொழிற்சாலைக்கே வந்து மொத்தமாக வங்கிச் செல்கின்றனர்.
    கார்த்திகை தீபத் திருநாளுக்காக  அகல் விளக்கு தயாரித்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு பெண் தொழிலாளி ஒருவர் 5,000 அகல் விளக்குகள் வரை தயாரிப்பார்.
    50 கிலோ மூட்டை மண்ணில் 3,000 அகல் விளக்குகள் தயாரிக்கலாம். மண் எடுப்பதில் பிரச்னை உள்ளது.
    அகல் விளக்கு பீஸ் (அலகு) அடிக்க மண்ணெண்ணை தேவைப்படுகிறது. மண்ணெண்ணை கிடைக்காததால் டீசலை பயன்படுத்தி அகல் விளக்கு தயாரிக்கும் போது அதிக சேதம் ஏற்படுகிறது.
    எனவே, மண்ணெண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு வழி வகை செய்ய வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai