சுடச்சுட

  

  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின், பண்ருட்டி ஒன்றிய பேரவைக் கூட்டம், பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஒன்றிய நிர்வாகி அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், செயலர் எம்.பி.தண்டபாணி பங்கேற்றனர்.
  நிர்வாகிகள் தேர்வு: கூட்டத்தில் ஒன்றியத் தலைவராக ஏ.வரதராஜன், செயலராக ஏ.பன்னீர், பொருளராக கே.வெற்றிவேல், துணைத் தலைவர்களாக கே.மலையான், கணேசன், துணைச் செயலர்களாக எம்.ராஜேந்திரன், சாம்பசிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  இதில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டிச.10-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது. ஊரக வேலைத் திட்ட பணி நாள்களை 150ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai