சுடச்சுட

  

  தில்லைக் காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.14 லட்சம்

  By DIN  |   Published on : 01st December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5.14 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
  இந்து அறநிலையத் துறை நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர்கள் சீனுவாசன், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
  கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார், முத்துக்குமரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும்  பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 841 ரூபாய் கிடைத்தது.
  மேலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 6 கிராம், வெள்ளி 155 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் யுஎஸ்ஏ டாலர்-14, சவுதி அரேபியா ரியால்-1 ஆகியவை இருந்தன.  
  உண்டியலில் 500 ரூபாய் கட்டு: உண்டியல் திறந்து எண்ணிய போது செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள் கட்டு ஒன்று இருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai