சுடச்சுட

  

  தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடலூர் பள்ளி மாணவர்கள் தேர்வுபெற்றுள்ளனர்.
  தில்லியில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் தமிழக அணியில், கடலூர் புனித வளனார் பள்ளி மாணவர்கள் நிவாஸ், பத்மராஜூ ஆகியோர் முறையே குத்துச்சண்டை, யோகா போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
  சத்தீஸ்கரில் நடைபெறும் கோ-கோ போட்டியில் அரவிந்த், ஆமதாபாத்தில் நடைபெறும் நீச்சல் போட்டியில்  தினேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  அதேபோல் 2016-17ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 110 மாணவர்கள், மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
  மேலும், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து, குத்துச்சண்டை, ஜூடோ, தேக்வாண்டோ, வாள்சண்டை போட்டிகளில் 15 பேர் பங்கேற்கின்றனர்.
  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி இயக்குநர் அசோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன் பால்ராஜ், ஜஸ்டின்கிளமன்ட், அலெக்சாண்டர் மற்றும் பயிற்றுநர்களை பள்ளி முதல்வர் பி.அருள்நாதன் அடிகளார் பாராட்டினார்.
  மேலும் பாலர் பள்ளி முதல்வர் பி.சைமன் அந்தோனிராஜ், விடுதித் தந்தை குழந்தையேசு ஆகியோரும் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai