சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டையில் மீன் வளர்ப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

  By DIN  |   Published on : 01st December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிபேட்டையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மீன் வளர்ப்புப் பணியை சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
   அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:   
  தமிழக மீன் வளத்துறை சார்பில் சிதம்பரம் தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் 6 மீன் வளர்ப்புக் குட்டைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  இக்குட்டைகளில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஒரு குட்டையில் பால்கெண்டை மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது.  படிப்படியாக மீதமுள்ள 5 குட்டைகளிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படும் என்றும், இக்காலங்களில் மீன் விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்றார்.
   முன்னதாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசுகையில், சிதம்பரம் தொகுதிக்கு உள்பட்ட அன்னங்கோயில் மீனவர் பகுதியில் முகத்துவாரத்தை தூர் வாரிட தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
   மேலும், மீனவர்களுக்கு தமிழக அரசின் சலுகைகள், திட்டங்கள் உடனுக்குடன் கிடைத்திட ஆவண செய்திட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
  கூட்டத்தில் மீன் வளத்துறை துணை இயக்குநர் கார்த்திகேயன், உதவி இயக்குநர் மோகன்குமார், உதவி செயற் பொறியாளர் ஞானசேகரன், ஆய்வாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மீன் வளர்ப்பு ஆய்வின்போது, முன்னாள் அமைச்சர் செல்வி
  இராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் மாரிமுத்து, சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றியச் செயலாளர் அசோகன், அவைத் தலைவர் கோவி.ராசாங்கம், நகர இளைஞரணிச் செயலாளர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai