சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியரும், இளையோர் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளருமான ஜி.செந்தில்குமாருக்கு, "இளம் பொருளாதார நிபுணர் விருது-2016' வழங்கப்பட்டுள்ளது.
  ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற 37ஆவது தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான சி.ரங்கராஜன் விருதினை வழங்கினார்.
  இந்த விருதானது ஆண்டுதோறும் தமிழ்நாடு அளவில் சிறந்த முறையில் வளர்ந்துவரும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேச மற்றும் தேசிய இதழ்களில் எழுதியது, 50-க்கும் மேற்பட்ட ஆய்வுத்தாள்களை பல்வேறு பன்னாட்டு மாநாடுகளிலும், தேசிய கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்தற்காக இந்தாண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்புப் பட்டயம் உள்ளடக்கியதாகும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai