சுடச்சுட

    

    மனுநீதி முகாமில் 213 பேருக்கு நலத்திட்ட உதவி: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

    By DIN  |   Published on : 01st December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்டுமன்னார்கோவில், அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு, ரூ.14.17 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     முகாமிற்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது: ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெருக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.4 லட்சம் வரை மருத்துவ வசதி பெற முடியும்.
     மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1.16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் தடையின்றி விவசாயம் செய்யவும், உரம் மற்றும் இடுபொருள்கள்  கிடைக்கவும், பயிர்க் கடன் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.  
    காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகமான மக்கள் வறுமையில் உள்ளனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்க முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
     சிதம்பரம் எம்.எல்.ஏ., கே.ஏ.பாண்டியன் பேசுகையில்,கடலோர பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக மாறுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
     மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கெனவே பெறப்பட்ட 112 மனுக்களில், 78 மனுக்கள் மேல் நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
     முகாம் நாளான புதன்கிழமை 121 மனுக்கள் வரப்பெற்றன. அவைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
     முகாமில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் வருவாய் கேட்டாட்சியர் விஜயலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் பி.மோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வே.ஜவஹர்,  வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai