சுடச்சுட

  

  மாநில விளையாட்டுப் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் தகுதி

  By DIN  |   Published on : 01st December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
  டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, விழுப்புரம் மண்டல அளவிலான பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
  இப்போட்டியில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, மாநில அளவிலான எறிபந்து, இறகுப் பந்து, சதுரங்கம், தேக்வாண்டோ மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்க 20 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.  தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் டி.மணிகண்டன், ஆர்.ராதிகா, என்.தினேஷ்குமார் ஆகியோரை பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai