சுடச்சுட

    

    திட்டக்குடியில் அரசு வங்கியைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திட்டக்குடியில் மாநில நெடுஞ்சாலையோரம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. புதன்கிழமை வங்கியில் பணம் எடுக்க ஏராளமான ஆண்கள், பெண்கள் காத்திருந்தனர். ஆனால், பிற்பகல் 1.30 மணி அளவில் வங்கியில் பணம் இல்லை என ஊழியர்கள் கூறியுள்ளனர்.
     இதனால், நீண்ட நேரம் காத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் சுதாகர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
    வங்கி நிர்வாகம் தரப்பில் 3 மணிக்கு பணம் வந்ததும் வழங்கப்படும் எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai