சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை வட்டாரம் சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
  கண்காட்சியில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 16 பள்ளிகள் பங்கேற்றன. மின் சிக்கனம், பசுமை சூழல் கிராமம், உணவு உற்பத்தி, இயற்கை குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மாதிரி காட்சிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அறிவியல் கண்காட்சியில் கோவிலாம்பூண்டி நடுநிலைப்பள்ளி சிறப்பு பரிசும், கவரப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி முதல் பரிசும், மீதிகுடி நடுநிலைப்பள்ளி இரண்டாம்பரிசும், கவரப்பட்டு தொடக்கப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கந்தசாமி பரிசுகளை வழங்கினார்.
  கண்காட்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ரா.குணசுந்தரி, இடைநிலை ஆசிரியை கோமதி, ஆசிரியப் பயிற்றுநர் காயத்திரி பூங்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai