சுடச்சுட

  

  பேரிடர் காலங்களில் உதவக்கூடிய உடனடி மீட்புக்குழு கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவில்லையென மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டதால் ஆயத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதற்காக புயல், வெள்ள பாதிப்புக்குள்ளாகக் கூடிய 274 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு உடனடி மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
  இக்குழுக்களில் அந்தந்தப் பகுதி இளைஞர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், அரசு சாரா அமைப்பினர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் அடங்கியிருப்பார்கள் என்றும், இவர்கள் பாதிப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக களத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  ஆனால், இப்படியொரு குழு கடற்கரை கிராமமான தேவனாம்பட்டினத்தில் அமைக்கப்படவில்லையென அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் மீனவ பஞ்சாயத்து மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மீனவர் ஆறுமுகம் கூறினார்.
  மேலும், தேவனாம்பட்டினத்தில் ஆய்வு செய்த ஆட்சியரிடம் மீனவர் சுப்பிரமணியன் கூறுகையில், கடலூர் துறைமுகத்தில் மீன்வளத் துறை அலுவலகத்தின் இருபுறங்களிலும் செல்லக்கூடிய 2 கால்வாய்களையும் ஆழப்படுத்த வேண்டும் என்று நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். அதனை நிறைவேற்றாததால் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஎன்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai