சுடச்சுட

    

    சமூகப் பொறுப்புணர்வுப் பணியில் அடித்தட்டு மக்களுக்கு முன்னுரிமை: என்எல்சி தலைவர்

    By DIN  |   Published on : 02nd December 2016 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளில் அடித்தட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.
    சர்வதேச மேலாண்மைக் கல்வியகம் சார்பில், ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரத்தில் பொதுமக்களுக்கு உகந்த வகையில் சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவனத்தின் வியூகங்களை அமைத்தல் என்ற தலைப்பிலான 3 நாள் மேலாண்மைப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
    என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:
    மத்திய பொதுத் துறை
    நிறுவனங்கள் மேற்கொள்ளும் சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளானது மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தப் பணி மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
    சமூகப் பொறுப்புணர்வு என்பது நமது நாட்டுக்கு புதிதல்ல. பழங்காலத்தில் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வசுதேவ குடும்பகம், சர்பஜன் ஹிதே மற்றும் சர்பஜன் சுகாய் போன்ற கருத்துகளிலிருந்தே நாம் தற்போது மேற்கொண்டு வரும் சமூகப் பொறுப்புணர்வுப் பணிகள் வரைவு செய்யப்பட்டுள்ளன.
    பொதுத் துறை நிறுவனங்களின், சமூகப் பொறுப்புணர்வுத் துறை அதிகாரிகள், ஆக்கப்பூர்வமான வகையில் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
    நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவன ஆலோசகர் பி.சி.பாணிக்கிரஹி, புதுதில்லி சர்வதேச மேலாண்மைக் கல்வியகத்தின் புல முதல்வர் அருண் ரத், உதவிப் பேராசிரியர் ஷைலேந்திரநிகம், புவனேஸ்வர் சர்வதேச மேலாண்மைக் கல்வியக பேராசிரியர் சுப்ரிதி மிஸ்ரா, இயக்குநர் ரமேஷ் பெல் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் துறை அதிகாரிகள் 40 பேர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai