சுடச்சுட

  

  நடா புயல் எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா புயலானது வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் மாவட்டத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
  மேலும் பள்ளிகள், கல்லூரிகள் பொதுமக்கள் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கடலூர் உள்பட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ.கள், பொறியல் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அறிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai