சுடச்சுட

  

  பண்ருட்டி காந்தி சாலை, வரதராஜப் பெருமாள் கோயிலில் திருத்தேர் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் பிரமோற்சவத்தில், 9ஆம் நாள் நிகழ்ச்சியாக திருத்தேர் புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
  ஆனால், இக்கோயில் தேரில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரமோற்சவம் நடத்தப்படவில்லை.
  இந்த நிலையில், கடந்த ஆண்டு இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
  அதன்படி, கோயில் கைங்கர்ய சபா தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், திருத்தேர் திருப்பணி தொடக்க பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் பட்டாச்சாரியார் கஸ்தூரி ரங்கன் பூஜைகளை நடத்தினார். நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், தொழிலதிபர்கள் கே.என்.சி. மோகனகிருஷ்ணன், சி.ராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai