சுடச்சுட

  

  மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை: ஆசிரியர்களுக்குப் பயிற்சி

  By DIN  |   Published on : 02nd December 2016 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வழங்கும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் அடுத்ததாக என்ன படிக்கலாம், கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு, வேலைவாய்ப்புள்ள படிப்புகளைத் தேர்வு செய்வது எவ்வாறு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளனர். இதனை போக்கவும், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பெண் ஆசிரியர்களுக்கு முதல்கட்ட பயிற்சியளித்து, அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
  இதன்படி கடலூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமை, முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி தொடங்கி வைத்தார்.
  முகாமில் பங்கேற்ற 125 ஆசிரியர்களுக்கு திட்டத்தின் மாநில உதவி ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கருணாகரன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் கஸ்தூரி, பாலமுருகன், இளநிலை அலுவலர் முரளிதரன் ஆகியோர் பயிற்சியளித்தனர். தற்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
  இப்பயிற்சியானது ஏற்கெனவே புதன்கிழமை விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 115 ஆசிரியர்களுக்கு விருத்தாசலத்தில் வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai