சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருடுபோனது.
  சிதம்பரம் அருகே புத்தூர் மெயின்ரோட்டில் உள்ள அம்பலவாணன் நகரில் வசிப்பவர் உதயசூரியன் (50). விவசாயியான இவர் புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு திரும்பியபோது, பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.4 ஆயிரம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai