சுடச்சுட

  

  நடா புயலையொட்டி மாவட்டத்தில் 4 இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
  கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையினால் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
  இதனைத் தொடர்ந்து தற்போது நடா புயல் கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு சரிசெய்யப்பட்டன.
  நடா புயல் வெள்ளிக்கிழமை (டிச.2) அதிகாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் செயல்படவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் வந்துள்ளனர்.
  அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 76 பேர் அதன் தலைவர் ஜித்தேஷ் தலைமையில் புதன்கிழமை இரவு கடலூர் வந்தனர்.
  இவர்களில் தலா 38 பேர் கடலூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
  அதேபோல் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 40 பேர் கடலூர் வந்துள்ளனர்.
  இவர்கள் 2 பிரிவுகளாக கடலூர் முதுநகர், புதுச்சத்திரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்து இயல்பு நிலை திரும்பும் வரை இக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai