சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பாட்டு மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில், உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பள்ளி முதல்வர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்ணாகிராமம் ரா.கந்தசாமி, பண்ருட்டி ப.நல்லதம்பி ஆகியோர் பங்கேற்று, உணவு கலப்பட தடுப்பு குறித்தும், உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006-ன் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
  லயோலா கல்லூரிப் பேராசிரியர்கள் ஆனந்த், அந்தோணி, அன்பரசன், ஹென்றி, ரூபன், திட்ட மேலாளர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற, சென்னை லயோலா கல்லூரி என்சிசி மாணவர்கள் மற்றும் மதர் தெரசா பள்ளி மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் நீட்டா நன்றி கூறினார்.
  ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ரா.மெல்கியோர்
  செய்திருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai