சுடச்சுட

  

  கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் சுப்பராயலு பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், ஓவியரணி மாநிலச் செயலர் ஜெயசீலன், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலர் கார்க்கிமுருகன், தொண்டரணி மாநில துணைச் செயலர் ஜான்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
  கூட்டத்தில் டிச.6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிப்பது. புதுச்சேரியில் நடைபெறும் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசைக் கண்டிப்பது.
  சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரை தர்மசாஸ்தா கோயில் என்ற பெயரிலேயே அழைக்க கேரள அரசு எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பது. பெயர் மாற்றம் செய்த கோயில் நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில் ஒன்றியச் செயலர்கள் ராமச்சந்திரன், சுபாஷ், சு.நிலவன், இளையராஜா, சிவசக்தி, நகரச் செயலர்கள் புலிகொடியன், ப.திருமாறன், கார்த்திகேயன், சோதிமணி, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  முன்னதாக நகரச் செயலர்கள் மு.செந்தில் வரவேற்க, ஆ.சேதுராமன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai