சுடச்சுட

  

  மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டனர். சில வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.
  மத்திய அரசு உயர் மதிப்புகொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவ.8ஆம் தேதி இரவு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுப்பது, ஏடிஎம் மூலமாக பணம் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.
  இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததைத் தொடர்ந்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கான மாத சம்பளம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது. மேலும் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவோருக்கும் அதற்கான பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டது. அந்தப் பணத்தை பெறுவதற்காக பெரும்பாலான வங்கிகளில் சம்பளம், ஓய்வூதியம் பெறுவோர் வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக எஸ்பிஐ வங்கியிலேயே அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படுவதால் அந்த வங்கியில் அதிகமான கூட்டத்தை காண முடிந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் பெற்றுச் சென்றனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளே வழங்கப்பட்டன. ஆனால், ஒரு சில அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும், சில தனியார் வங்கிகளிலும் புதிய ரூ.500 நோட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அந்த வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகமானவர்கள் வரிசையில் காத்திருந்து பெற்றனர். இருப்பினும் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய ரூ.500 நோட்டுகள் வழங்கப்பட்டன.
  மாவட்டம் முழுவதும் 376 ஏடிஎம் மையங்கள் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமையும் சுமார் 70 சதவீத ஏடிஎம்கள் இயங்கவில்லை. புதிய ரூ.500 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படுவதால் விரைவில் சில்லறைத் தட்டுப்பாடு நீங்கி சகஜ நிலை திரும்பும் என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai