சுடச்சுட

    

    கடலூரில் சாலையில் தீக்குளித்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (66). கடலூர்-புதுவை சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்ட ராஜமாணிக்கம், அருகிலுள்ள அப்துல்காதர் நகருக்குச் சென்றார். அங்கு ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலரின் வீட்டின் முன் சாலையில் நின்றுகொண்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் உயிரிழந்தார்.
    இதுகுறித்து அவரது மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai