சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜனவரி 2இல் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடக்கம்

    By DIN  |   Published on : 03rd December 2016 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் ஜன.2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி, வருகிற ஜன.2ஆம் தேதி மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவ ஆச்சாரியார் வி.நடராஜ ரத்தின தீட்சிதர் கொடியேற்றுவார்.
    இதைத் தொடர்ந்து, ஜன.6ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா, 7ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா, 8ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலா, 9ஆம் தேதி தங்க ரதத்தில் வெட்டுக்குதிரையில் சோமாஸ்கந்தர் வீதிஉலாவும் நடைபெறும். 10ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறும். 11ஆம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். 12ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடையும்.
    விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் கே.பட்டுரத்தின தீட்சிதர், துணைச் செயலர் எஸ்.ஆர்.நடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர். விழா நடைபெறும் 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai