சுடச்சுட

  

  டிராக்டர் ஓட்டுநர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
  கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை அம்பேத் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷம் மகன் ராதாகிருஷ்ணன் (28), டிராக்டர் ஓட்டுநர். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சாம்பார் (எ) ரங்கநாதனின் மகன் வாசு (எ) முருகானந்தம் (33) ரூ.10 ஆயிரம் கடனாகப் பெற்றாராம். இந்தத் தொகையை ராதாகிருஷ்ணன் கடந்த 2013ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி திருப்பிக் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் அதே பகுதியிலுள்ள தனது பாட்டி சிவகாமியின் வீட்டுத் திண்ணையில் தூங்கியபோது அங்கு வந்த வாசு, நண்பர்கள் குமார் மகன் குணசேகரன் (29), நாகப்பன் மகன் சத்தியராஜ் (29) ஆகியோர் கத்தியால் ராதாகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பினர்.
  காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 23இல் உயிரிழந்தார். நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி பி.தனபால் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அதில் வாசு, குணசேகரன், சத்தியராஜ் ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai