Enable Javscript for better performance
திருநங்கையருக்கு சுய அதிகாரம்: பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை- Dinamani

சுடச்சுட

    

    திருநங்கையருக்கு சுய அதிகாரம்: பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

    By DIN  |   Published on : 03rd December 2016 01:37 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை சார்பில், திருநங்கையர் சமூகத்துக்கான சுய அதிகாரமளித்தல் மற்றும் புடவை வடிவமைப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
    பயிற்சிப் பட்டறையின் இயக்குநரும், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவருமான சி.சுப்ரமணியன் வரவேற்றார். தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.புகழேந்தி பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், திருநங்கையர்களுக்கு அனைத்து வழிகளிலும் அதிகாரமளிக்கப்பட்டால் அவர்கள் தங்களது வாழ்வை நன்கு மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
    புதுச்சேரி சகோதரன் அமைப்பு தலைவி கே.சீத்தல்நாயக் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், திருநங்கைகளின் உரிமைகள் மேம்படுவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். பயிற்சி முகாமில் 48 திருநங்கையர்கள் பங்கேற்று புடவை வடிவமைப்பு குறித்து பயிற்சி பெற்றனர். மக்கள் கல்வியியல் துறைத் தலைவர் கே.அறிவுக்கரசு பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வழிகாட்டினார்.
    முகாமின் நிறைவு விழா மாலையில் நடைபெற்றது. கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன், பொருளியல் துறைப் பேராசிரியர் இ.செல்வராஜன் ஆகியோர் பயிற்சிப் பட்டறையின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சான்றிதழ்களை வழங்கினர். துணை இயக்குநர் எஸ்.சிவராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முனைவர் சி.சுப்ரமணியன், முனைவர் எஸ்.சிவராஜன், முனைவர் பி.முரளிதரன் ஆகியோர் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai