சுடச்சுட

    

    புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் ஆய்வு

    By DIN  |   Published on : 03rd December 2016 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாழங்குடா கிராமத்தில் உள்ள புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    நடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி மாவட்டத்தில் 49 கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் வட்டம், தாழங்குடா கிராமத்தில் உள்ள புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலையில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, தங்குபவர்களுக்கு சமைக்கப்படும் உணவு குறித்தும், எத்தனை நபர்களுக்கு சமைக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
    உணவை வீணாக்காமலும், முழுமையாகவும் அனைவருக்கும் வழங்க வேண்டும். தங்குபவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் இங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில், மருந்துகள் இருப்பு குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கூறுகையில், நடா புயலின் தாக்கத்தை எதிர்நோக்கி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மிகவும் திறம்பட அப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புயல் வலுவிழந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 புயல் பாதுகாப்பு மையங்கள் தயாராக இருந்தன என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai