சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே உள்ள புஷ்பகிரி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  சங்ககாலப் பெருமையும், பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் திருப்பணிகளை
  பெற்றதுமான பூமலை எனப்படும் புஷ்பகிரி மலையாண்டவர் கோயில், சித்தர்களும், வள்ளலாரும் தங்களின் உறைவிடமாகத் திகழ்ந்து பெருமை பெற்றத் திருத்தலமாகும்.
  பண்ருட்டிக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும், ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோயில் என்றே பண்டைக்காலம் தொட்டு வழங்கப்பட்டு வந்துள்ளது.
  படிகள் மூலம் மட்டுமே இக்கோயிலுக்குச் செல்லும் நிலை இருந்தது.
  இந்த நிலையில், வாகனங்கள் செல்லும் வகையில் மலையில் சுழற்சாலை அமைக்கப்பட்டது. மேலும், ராஜகோபுரப் பணிகளும், பக்தர்கள் தங்குவதற்கான இருப்பிட வசதிகளும் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai