சுடச்சுட

    

    75 பயனாளிகளுக்கு விலையில்லா வீடுகள்: அமைச்சர் வழங்கினார்

    By DIN  |   Published on : 03rd December 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகாட்டுப்பாளையத்தில் 75 பயனாளிகளுக்கு, இலவச கான்கிரீட் வீடுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
    பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது பெரியகாட்டுப்பாளையம். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
    இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், வெள்ளத்தில் வீடுகளை இழந்த 75 பேருக்கு தனி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
    மேலும், இந்திரா நினைவுக் குடியிருப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ் அந்த இடங்களில் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில், மொத்தம் ரூ.90 லட்சம் செலவில் 75 புதிய வீடுகள் கட்டப்பட்டன. மேலும், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.50 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அறை, ரூ.4.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுகள், ரூ.2.40 மதிப்பில் மதிப்பில் குடிநீர்க் குழாய் விரிவாக்கப் பணி, ரூ.2.60 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள், ரூ.6.89 லட்சம் மதிப்பில் மின் வசதி, இயற்கை இடர்பாடு நிதி மூலம் ரூ.4.70 லட்சம் மதிப்பில் சாலை வசதி ஆகியவையும் செய்து தரப்பட்டுள்ளன. புதிய கான்கிரீட் வீடுகள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்கும் விழா பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய வீடுகளை திறந்துவைத்து பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார்.
    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ், சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சண்முகம், முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் தேவநாதன், ஒன்றியச் செயலர்கள், பண்ருட்டி கமலக்கண்ணன், அண்ணாகிராமம் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் கலந்து
    கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai