சுடச்சுட

  

  கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் சனிக்கிழமை கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
  மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், பொதுச் செயலர் மு.பொன்னிவளவன், துணைத் தலைவர்கள் கோ.சீனுவாசன், ஏ.சிவராஜ் செயலர்கள் கு.சரவணன், கே.கமலக்கண்ணன், கே.ஆர்.குப்புசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
   கூட்டத்தில் தமிழக அரசு நிர்வாகத்தில் சில துறைகளில் அதிகாரிகளின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இப்போக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சங்கம் சார்பில் கண்டிப்பது. இதுபோல் மாநிலம் முழுவதும் நடைபெற்ற அத்துமீறல்களை முதல்வரின் கவனத்துக்கு மனுவாகக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலர் ஜி.ஜெயச்சந்திரராஜா, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலப் பொருளர் டி.ஜெயகணேஷ், காவல் துறை துப்புரவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் வி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலர் மு.செல்லச்சாமி வரவேற்க, மாநிலச் செயலர் எஸ்.ஆனந்தன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai