சுடச்சுட

  

  விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை, புலியூர், கருவேப்பிலங்குறிச்சி, மாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கின்றனரா என நோயாளிகளிடம்
  கேட்டறிந்தார். தொடர்ந்து மகப்பேறு அறை, புறநோயாளிகள் அறை, ஸ்கேன் அறை, பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவப் பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மற்றும் மருத்துவர்கள் எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.
  மனுவில், விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சூரிய மின்சக்தி சாதனம், ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, குளிர் சாதன வசதியுடன் கூடிய ஸ்கேன் அறைகள் அமைக்க வேண்டும். புலியூர் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, ஸ்கேன் அறை, ஜெனரேட்டர், குடிநீர் சுத்திகரிப்பு சாதன வசதிகளும், இதேபோல் மாத்தூர் மருத்துவமனை, கருவேப்பிலங்குறிச்சி மருத்துவமனையிலும் உரிய வசதிகள் செய்துதர வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.   மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai