சுடச்சுட

    

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பை அள்ளும் 14  வண்டிகள் திருட்டு

    By DIN  |   Published on : 04th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை அள்ளும் 14 வண்டிகள் திருடுபோயின.
    கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ளது வடக்குத்து ஊராட்சி. இந்த ஊராட்சிப் பகுதியில் குப்பைகளை சேகரிப்பதற்காக 14 வண்டிகள் இருந்தன. இந்த வண்டிகளை சனிக்கிழமை ஊராட்சி செயலர் ஆய்வு செய்தபோது அவை காணாமல் போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். இதுகுறித்து ஊராட்சி செயலர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai