சுடச்சுட

  

  என்.எல்.சி.யில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வி.சி.க. கோரிக்கை

  By DIN  |   Published on : 04th December 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
  நெய்வேலியில் அக்கட்சியின் ஒருங்கிணைந்த நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வட்டம் 27இல் உள்ள தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி மையப் பகுதி நகரச் செயலர் வேலு தலைமை வகித்தார். கிழக்கு நகரச் செயலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
   கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் கருப்புசாமி, மாவட்டப் பொருளர் துரை.முருதமுத்து ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். நெய்வேலி தொகுதி துணைச் செயலர் பாட்ஷாபன்னீர், நகரப் பொருளர் தேசிங்கு, நகர துணைச் செயலர்கள் குழந்தைராஜ், வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் மணிவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் சிவா, பன்னீர்செல்வம், சசி, சங்கர், ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  தீர்மானங்கள்: கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின்  நிலைப்பாட்டைக் கண்டிப்பது. டிச.6ஆம் தேதி அம்பேத்கர் சிலை முன் வீரவணக்க உறுதிமொழி ஏற்பது. டிச.26ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற உள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாநாட்டில் நெய்வேலி நகரம் சார்பில் திரளானோர் பங்கேற்பது. என்எல்சி விரிவாக்கப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவதை தவிர்த்து, உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai