சுடச்சுட

  

  கடலூரில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டார்.
  நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி மலர்மங்கை (45). சனிக்கிழமை மாலையில் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்குச் சென்ற இவர் திடீரென கடலுக்குள் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
  அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் ராமதேனு, சிவக்குமார் ஆகியோர் கடலுக்குள் சென்று மலர்மங்கையை மீட்டு அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  அவரிடம் விசாரணை நடத்திய தேவனாம்பட்டினம் போலீஸார், மலர்மங்கையின் குடும்பத்தினரை வரவழைத்து அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai