Enable Javscript for better performance
கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலையா?- Dinamani

சுடச்சுட

    

    கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலையா?

    By DIN  |   Published on : 04th December 2016 08:49 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரில் முதியவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, கந்துவட்டி கொடுமை காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் எம்.பி.ராஜமாணிக்கம் (64). கடலூர்-புதுவை சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை அப்துல்காதர் நகரில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மகன் வேல்முருகன்
    கொடுத்தப் புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்தனர்.
    இந்த நிலையில் வேல்முருகன் மாவட்ட எஸ்பி செ.விஜயகுமாரை சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தார். அதில், கந்துவட்டி கொடுமையால் தனது தந்தை தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திட போலீஸாருக்கு எஸ்பி அறிவுறுத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai