சுடச்சுட

  

  சிதம்பரம் வட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக பொது விநியோகத் திட்டம் சார்பில் குடும்ப அட்டை விவரங்களை வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி குறித்த பயிற்சி முகாம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   நிகழ்ச்சிக்கு, கடலூர் பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சங்கரன் தலைமை வகித்தார். அவர் பேசியது:
  வீடு, வீடாகச் சென்று குடும்ப அட்டை எண், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, எரிவாயு இணைப்பு எண்ணிக்கை போன்ற விவரங்களை குடும்ப அட்டையுடன் சரிபார்த்திட வேண்டும்.   ஆதார் எண் விவரம் குறிப்பிடாமல் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இதுவரை ஆதார் அட்டை பெறவில்லையெனில் விரைவில் பெற்றிடுமாறு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஆதார் அட்டை பெற்றிட வலியுறுத்த வேண்டும்.
  வீட்டுக் கதவு அடைக்கப்பட்டிருந்தால், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்புகையுடன் விசாரணை செய்திட வேண்டும். களப்பணியை 15 நாள்களுக்கு முடிக்க வேண்டும் என்றார்.
  கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கீதா, வட்டாட்சியர் மகேஷ், குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் சிவகாமசுந்தரி, துணை வட்டாட்சியர்கள்
  பழனியப்பன், செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai