சுடச்சுட

    

    தேசியப் போட்டிகளில் சிறப்பிடம்: பல்கலை. மாணவர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 04th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல என்சிசி மாணவர்கள் மேற்குவங்க மாநிலம், போல்பூரில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் பங்கேற்று, தமிழக கலை நிகழ்ச்சிகளை நடத்தி 3 பரிசுகளை வென்றனர். மேலும் ஜம்முவில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் 2 பரிசுகளை வென்றனர். தில்லியில் நடைபெற்ற தேசியப் போட்டியில் வேளாண் புல மாணவிகள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
     என்சிசி கமாண்டிங் ஆபீசர் ஆர்.சீனிவாசன், வேளாண்புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோரது ஊக்குவிப்பினால் கேப்டன் ஆர்.கனகராஜன் வழிகாட்டுதலின்படி பல்வேறு முகாம்களில் பங்கேற்று பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளை
    அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.மணியன், பதிவாளர் க.ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai