சுடச்சுட

  

  கடலூர் வட்டம், தாழங்குடா கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  ஆய்வின்போது, குடும்ப அட்டைகள் குறித்த தகவல்கள் விற்பனை முனை உபகரணத்தில் (டர்ண்ய்ற் ர்ச் நஹப்ங்) முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட விவரம் குறித்தும், குடும்ப அட்டைதாரரின் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் இணைக்கப்பட்டுள்ள விவரம் குறித்தும் விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினார்.
   மேலும், அரிசியின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர், சர்க்கரை, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பொருள்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.  ஆய்வின்போது, சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், வட்டாட்சியர் அர.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai