சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  விருத்தாசலத்தில் அனைத்து மாவட்ட பார்வையற்றோர் உரிமை சங்கம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் இணைந்து 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். அனைத்து பார்வையற்றோர் சங்க மாவட்டத் தலைவர் சையத் சர்தார் தலைமை வகித்தார்.
  காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மதியம் 2.30 மணியளவில் மாற்றுத் திறனாளிகள் திடீரென பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளிக்க வேண்டும்.
  இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் நேரில் வந்து உறுதியளித்தால் கலைந்து செல்வோம் எனக் கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.
  இதனையடுத்து சங்கத்தினர் மறியலைக் கைவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai