சுடச்சுட

    

    கடலூரில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமையில் கடலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    கடலூர் மாவட்டம் அடிக்கடி இயற்கை இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் ரூ.2 லட்சம் வீதம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
    மாவட்ட பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணிச் செயலர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai