சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கூட்டம் மற்றும் படத்திறப்பு விழா சிதம்பரம் நகர மக்கள் குழு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அமைப்பாளர் ஆர்.கே.கணபதி தொடக்க உரையாற்றினார். டாக்டர் முத்துவீரப்பன் இயற்றிய எம்ஏஎம் நினைவுப் பாடலை சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாடினர்.
  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பாஸ்கரன் எம்.ஏ.எம்.ராமசாமி உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன், முன்னாள் துணைவேந்தர் எம்.ராமநாதன், பேராசிரியர் கண.சிற்சபேசன், காமராஜ் கல்விக் குழுமங்களின் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், வழக்குரைஞர் சம்பந்தம், இணைவேந்தரின் செயலர் எஸ்.ராஜேந்திரன், நெய்வேலி ராஜேந்திரன், டாக்டர் சபாபதிமோகன் ஆகியோர் பேசினர்.
  முன்னாள் துணை வேந்தர்கள் பத்மநாபன், பி.வி.வைத்தியநாதன், முன்னாள் எம்பி ஏ.முருகேசன், ரத்தின.ராமநாதன், பேராசிரியர் ராஜவன்னியன், நடனசபாபதி, ராமசாமி செட்டியார் பள்ளிக்குழுச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன், வழக்குரைஞர்கள் ஏ.கே.நடராஜன், ஏ.எஸ்.வேல்முருகன், டாக்டர் க.சம்பந்தம், நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், டாக்டர் ஏ.வி.ரங்காச்சாரியார், ஆனந்த நடராஜ தீட்சிதர், வீனஸ் எஸ்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டாக்டர் ஆர்.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai